பதிவு செய்த நாள்
17
ஜன
2023
10:01
சிதம்பரம்: பொங்கல் விழாவையொட்டி இன்று நடந்த காணும் பொங்கல் தினத்தையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி குடும்பத்தோடு குதுகளித்தனர். கோலாட்டம். கும்பி, சிலம்பம் என பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர், பொங்கல் விழாவில், மாட்டு பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கல் சிறப்பானதாகும். இன்றைய தினம் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தோடு சுற்றுலா தலங்களுக்கும், பொழுதுபோக்கு மையங்களுக்கும் சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பது வழக்கம்.
அந்த வகையில் ஒவ்வொறு ஆண்டும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் காணும் பொங்கல் கலைகட்டும். இந்த ஆண்டும் காணும் பொங்கல் விழாவையொட்டி நடராஜர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து காலை முதலே பொதுமக்கள் தங்கள் பொழுதை கழிக்க கோவிலுக்கு வரத்துவங்கினர். சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், காணும் பொங்கலையொட்டி நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபம், கோவில் வெளி பிரகாரத்தில் பெண்கள் பல குழுக்களாக பிரிந்து கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இளம் பெண்கள் கோகோ, கபடி விளையாடினர். கிராம பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மதிய உணவை எடுத்து வந்து உறவினர்கள், நண்பர்களுடன் கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டனர். தில்லை மற்றும் எம்.ஜி.ஆர். சிலம்ப பயிற்சி மையம் சார்பில் மாணவ, மாணவிகள் பங்கேற்று சிலம்பம் விளையாடினர். இதனை பொதுக்கள் ஆர்வத்துன் பார்வையிட்டனர். மேலும் மல்லர் கம்பம், இளவட்டம் கல் தூக்குவது போன்ற பல்வேறு நடந்ததை பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றும், பார்வையிட்டும் கவித்தனர். பொழுதுபோக்கு அம்சங்கள் இதனால் நடராஜர் கோவில் பிரகாரம் பொழுது போக்கு மைதானமாக காணப்பட்டது. சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.