பதிவு செய்த நாள்
18
ஜன
2023
09:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, ‘மறு ஊடல் விழா’வை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், அருணாசலேஸ்வரரை காண தவமிருந்த பிருங்கி மகரிஷிக்கு காட்சி கொடுக்க அருணாசலேஸ்வரர் செல்ல, அதை பராசக்தி அம்மன் எதிர்க்க, மீறி அருணாசலேஸ்வரர் செல்ல, அப்போது சுவாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஏற்படும், ஊடலை விளக்கும், ‘திருவூடல் விழா’ நேற்று முன்தினம் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று, அருணாசலேஸ்வரர் கிரிவலம் சென்று, பிருங்கி மகிரிஷிக்கு காட்சி கொடுத்த பின், செல்லும் வழியில் நகையை பறிகொடுத்து கோவிலிற்கு திரும்பினார். இதை தொடர்ந்து, மீண்டும், உண்ணாமுலையம்மனுக்கும், அருணாசலேஸ்வரருக்கும் இடையே சமரசமாகும் நிகழ்வை விளக்கும் வகையில், ‘மறு ஊடல் விழா’ நேற்று நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இந்த விழாவை காணும் தம்பதியிடையே ஒற்றுமை பலப்படும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.