பழநி முருகன் கோயிலில் கும்பாபிஷேக பூஜை இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2023 02:01
பழநி : பழநி மலை முருகன் கோயிலில் ஜன., 27ல் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளதையடுத்து பூர்வாங்க பூஜை இன்று (ஜன. 18) துவங்குகிறது.
இன்று மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை, மாலை 5:00 மணிக்கு யாகசாலையில் தீப வழிபாடு, புனித நீர் தெளித்தல், கடவுளிடம் அனுமதி பெறுதல் நடக்கவுள்ளது. நாளை (ஜன.19 ) காலை 9:00 மணி, மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. ஜன., 21 காலை 10:45 மணிக்கு தேவஸ்தான 64 மிராசு பண்டாரத்தார் சண்முக நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து மலைக்கோயில் வந்தடைவர். ஜன., 22 காலை 9:00 மணியிலிருந்து பூஜைகள் நடக்கும். ஜன., 23 மாலை 6:30 மணிக்கு முதல் கால யாக பூஜைகள் துவங்கும். தண்டாயுதபாணி சுவாமி கலசத்தில் ஆவாஹனம் செய்தபின் யாக சாலையில் எழுந்தருள்வார். ஜன., 26ல் படிப்பாதை சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கும் நிலையில் பக்தர்கள் கட்டுப்பாடு இன்றி அனுமதிக்கப்பட உள்ளனர். ஜன., 27ல் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடக்கும். பங்கேற்க விரும்பும் பக்தர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய இன்று முதல் இணையதளத்தில் முன் பதிவு துவங்குகிறது.
ரோப் கார் நாளை நிறுத்தம்: மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்பட உள்ளது. பக்தர்கள் மலைக்கோயில் செல்ல மற்ற வழிகளை பயன்படுத்துமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.