பதிவு செய்த நாள்
19
ஜன
2023
12:01
தென்தாமரைகுளம்: சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை த்திருவிழா நாளை (20ம்தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இந்த ஆண்டுக்கான தைத்திருவிழா நாளை (20ம்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 4
மணிக்கு முத்திரிபதமிடுதல், 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நடை பெறுகிறது. தலைமைப்பதி குருபால ஜனாதிபதி திருக்கொடியை ஏற்றிவைக்கிறார். குருமார்கள்
பாலலோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ண ராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் ஆனந்த், ஜனாயுகேந்த், ஜனாவை குந்த், நே ம்ரிஷ், பால் பையன் பணிவிடைகளை
செய்கின்றனர். தொடர்ந்து வாகன பவனி, பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு அய்யாதொட்டில் வாகனத்தில் தெருவை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.
27ம் தே தி மாலை 4 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுற்றுப்புற ராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தல், இரவு 11 மணிக்கு தலை மைப்பதியின் வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோலகாட்சி, அன்னதர்மம் நடக்கிறது. 30ம் பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.