மயிலாடுதுறை: திருவாவடுதுறை ஆதின பட்டினப்பிரவேச பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. 28ம் தேதி பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளின் ஆண்டு பெருவிழா மற்றும் பட்டினப்பிரவேசம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆதீன தலைமை மடத்தில் உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது தொடர்ந்து அன்னக்கொடி ஏற்றப்பட்டது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நாள்தோறும் சமூக பணி சைவப் பணி ஆகியவற்றில் சிறப்பான பணியாற்றி வருபவர்களுக்கு ஐந்தாயிரம் பொற்கிளியுடன் சிறப்பு விருதுகளும் சைவ சமயம் சார்ந்த புத்தகங்கள் வெளியிட்டும் நடைபெறுகிறது. தொடர்ந்து 5ம் நாள் உற்சவமாக கோமுக்தீஸ்வரர் கோவிலில் திருஞானசம்பந்தருக்கு இறைவன் பொற்கிழி வழங்கும் விழாவும், 28ஆம் தேதி குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனையும் அன்று இரவு ஆதின 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பல்லக்கில் வீதி உலா வந்து கொலு காட்சி அருளும் பட்டினப்பிரவேசமும் நடைபெறுகிறது. கொடியேற்று நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.