திருக்கோவிலூர்: தை அமாவாசையை முன்னிட்டு திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவில் தென்பெண்ணை ஆற்றில் சக்திக்கு தீர்த்தவாரி வைபவம் நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு தீர்த்தவாரி வைபவம் நடந்தது. காலை 10:30 மணிக்கு சக்தி, மேலதாளம் முழங்க புறப்பாடாகி தென்பெண்ணையாற்றில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், கலச ஸ்தாபனம், வேத மந்திரங்கள் முழங்க சக்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தென்பெண்ணையில் மூழ்கி தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.