பதிவு செய்த நாள்
23
ஜன
2023
04:01
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீபத்திருவிழாவை முன்னிட்டு ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நெல்லையப்பர்
கோயிலில் தை மாதத்தில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை லட்ச தீபத்திருவிழாவும், ஆண்டுதோறும் பத்ர தீபத்திருவிழாவும் நடந்து வருகிறது.
இந்த ஆண்டு பத்ரதீப துவக்க விழாவில் 63 நாயன்மார்கள் வீதியுலா, நால்வர் வீதியுலா நடந்தது. இந்த கட்டளைகளை ஆரெம்கேவி ஜவுளி நிறுவனம் செய்திருந்தது. இதில் ஆரெம்கேவி நிறுவன அதிபர்கள் சிவக்குமார், விஸ்வநாத், மாணிக்கவாசகம் செய்திருந்தனர். 2வது நாளில் ஜவுளிக்கடை மகமைச்சங்கம் மற்றும் துணி ணிகர் இலக்கிய வட்டம் சார்பில் பால்குடம் பவனி வருதல், 108 சங்காபிஷேகம் நடந்தது. அன்னதானம், நடந்தது. அன்னதானத்தை செங்கோல் ஆதீனம் 103வது சன்னிதானம் சிவப்பிரகாச சத்ய ஞானதேசிக பராமாச்சாரிய சுவாமிகள் துவக்கிவத்தார். மாலையில் நந்தி தீபம், பத்ர தீபம் உற்சவம் நடந்தது. மகமை சங்கம் சார்பில் சிறப்பு நாதஸ்வரம், தவில் நிகழ்ச்சி நடந்தது. விதா ஜவகரின் ற்றுணையாவது மச்சிவாயமே பக்தி சொற்பொழிவு நடந்தது. இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது