நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் 2ம் நாள் தெப்ப உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2023 10:01
நான்குநேரி: நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் நேற்று 2ம் நாள் தெப்ப உற்சவ திருவிழா நடந்தது. நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தைஅமாவாசையை முன்னிட்டு வானமாமலை பெருமாளுக்கு ஒரு கோட்டைஎண்ணெய் காப்பு உற்சவ திருவிழா நடந்தது. தொடர்ந்து 2ம் நாளான நேற்று மாலையிலும் தெப்பஉற்சவ திருவிழா வானமாமலை மடத்தின் 31வது மடாதிபதியான மதுரகவி வானமாமலை ராமானுஜஜீயர் ஆசியுடன் நடந்தது. இதில் காலையில் வானமாமலை பெருமாள் ஸ்ரீவரமங்கைத் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மாலையில் சுமார் 7 மணிக்கு வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கைத் தாயாரும், உடன் மணவாளவாமுனிகளுடன் கிருஷ்ணன் கோயிலை வந்தடைந்தது. அங்கு தெப்பகுளத்தில் வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கைத் தாயார் மணவாள மாமுனிகளுடன் எழுந்தருளிய பின்னர் தெப்பஉற்சவ திருவிழா துவங்கியது. தெப்பகுளத்தில்தெப்பம் 9 முறை வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.