பதிவு செய்த நாள்
24
ஜன
2023
10:01
திருநெல்வேலி: நெல்லை டவுன் பாட்டப்பத்து நெல்லை விநாயகர் மற்றும் மகாதேவ சுவாமி கோயிலில்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. நெல்லை டவுன் பாட்டபத்து நெல்லை விநாயகர் மற்றும் மகாதேவ சுவாமி கோயிலில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்று கும்பாபிஷேக விழா கடந்த 21ம் தேதி மங்கள இசையுடன் துவங்கியது. தேவதா அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், கோக்ஷபூஜை, கஜபூஜை, கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நவக்கிரஹ ஹோமம், சுதர்ஸன ஹோமம், ஸ்ரீ ஸூக்தஹோமம், லட்சுமி குபேர பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தன. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை 6 மணிக்கு நான்காம் காலயாக சாலை பூஜைகள் துவங்கின. விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாஜனம், த்ரவியாஹூதி, ஹோமம், ஸ்பர்ஸாஹூதி, நயனோன்மிலனம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம் நடந்தது. காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கும்பலக்னத்தில் வேதமந்திரத்துடன் கடம் எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து விமானம், நெல்லை விநாயகர் மற்றும் மகாதேவ சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம், விசேஷ அலங்கார தீபாராதனைநடக்கிறது. 12.30 மகேஸ்வர பூஜை, அன்னதானம் நடந்தது. இதில்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வீரமணி ராஜூ, அபிஷேக்வீரமணி ராஜூ குழுவினரின் பக்தி இன்னிசை நடந்தது. இதில்மாநகராட்சி மேயர் சரவணன், செயலாளர் வெங்கடபதி, கும்பாபிஷேக சர்வசாதகம் சுந்தரேசசர்மா மற்றும் குழுவினர் கலந்து கொண்டனர்.