பதிவு செய்த நாள்
24
ஜன
2023
04:01
உடுமலை: உடுமலை வெற்றி விநாயகர் கோவிலில் நடந்த கலச பிரதிஷ்டை விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
உடுமலை அருகே சின்னவீரம்பட்டி ஊராட்சி வெற்றிவேல் நகரில், வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கலச பிரதிஷ்டை விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் காலை, 9:00 மணிக்கு திருமூர்த்திமலை சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். இரவு, 8:30 மணிக்கு வாஸ்து பூஜை நடைபெற்றது. விழாவில் நேற்று, காலை, 5:30 மணி முதல், 7:00 மணி வரை, கணபதி ஹோமமும், காலை, 7:30 மணிக்கு, கலச பிரதிஷ்டை மற்றும் கலச பூஜை நடந்தது. காலை, 8:00 மணிக்கு, அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு, 7:00 மணி முதல், 10:00 மணி வரை, குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில், இந்திராநகர், வெற்றிவேல் நகர் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்திருந்தனர்.