பழநி கும்பாபிஷேகம் வரும் பக்தர்களை வரவேற்க தயாராகிறது கோயில் நிர்வாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2023 11:01
பழநி: பழநி மலைக்கோயில் கும்பாபிஷேக தரிசிக்க வரும் பக்தர்களை வரவேற்க பழநி கோயில் நிர்வாகம் தயாராகி வருகிறது.
பழநி மலைக்கோயிலில் ஜன.26,27 ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களை வரவேற்க கோயில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதில் மலைக்கோயில் கிரிவீதி மலைக்கோயில் விடுதி வளாகங்கள் அனைத்தும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் கும்பாபிஷேக தரிசனத்திற்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க பிரசாத பைகள் தயாராகி வருகிறது. கிரி வீதி, குடமுழுக்கு மண்டபம் பகுதிகளில் நிழல் கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகம் நடைபெறும் ஜன.27.,ல் கிரிவீதியில் உள்ள கோசலை வளாகம், பழைய நாதஸ்வர பள்ளி, குடமுழுக்கு நினைவு அரங்கம் ஆகிய பகுதிகளில் அன்னதானம் வழங்கப்படுகிறது. எல். இ. டி திரைகள், டிவிகள் வைக்கப்பட்டு கிரிவீதி, சன்னதி வீதி பகுதியில் இருக்கும் பொதுமக்கள் எளிதாக கும்பாபிஷேகம் தரிசிக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு நடத்த வகை செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் கும்பாபிஷேக கோபுரத்திற்கு மலர் தூவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிரி விதி மற்றும் மலைமீது உள்ள பக்தர்களுக்கு கும்பாபிஷேகம் நீர் தெளிக்க வசதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து இடையூறுகளை தவிர்க்க ஒரு வழிப்பாதை பார்க்கிங் வசதி, தற்காலிக பேருந்து நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் வரவழைக்கப்பட உள்ளனர். இது குறித்த முன்னேற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.