சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் நாட்டார்கள் காவடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. காரைக்குடி அருகே ஜெயங்கொண்டான் பகுதியில் இருந்து ரத்தினவேல் அனைத்து நாட்டார்கள் காவடி ஜன. 27ம் தேதி புறப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., சோழன் பழனிச்சாமி தலைமையில் 151 காவடிகளை பக்தர்கள் பாதயாத்திரை ஊர்வலமாக எடுத்து வந்தனர். நேற்று மருதிபட்டி கிராமத்தில் இக்காவடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ரத்தினவேல் மற்றும் காவடிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து சதுர்வேதமங்கலம் வழியாக சிங்கம்புணரி வந்த காவடிக்கு அப்பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.