வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2023 08:01
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் நாளை (பிப்.1) கும்பாபிஷேகம் நடக்கிறது.
இக்கோயிலில் கடந்த 2006ல் கும்பாபிஷே கம் நடந்தது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்பதால் கடந்த 2021 நவம்பரில் பாலாலய பூஜையுடன் அடுத்த கும்பாபிஷே கத்திற்கான திருப்பணிகள் துவங்கின. தற்போது கூடுதல் சிறப்பம்சமாக பெருமாள், சவுந்தரவல்லி தாயார் சன்னதி கர்பகிரகங்களை சுற்றிலும் நீராழி அமைக்கப்பட்டுள்ளது. திருப்பணி முடிந்து நாளை (பிப்.1ல்) கும்பாபிஷேகம் நடக்கவிருப்பதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நேற்று காலை துவங்கி நடந்து வருகிறது. இதற்கிடையில் நேற்று மாலை கும்பாபிஷேக ஏற்பாடுகளை வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்திராஜன் ஆய்வு செய்தார். வேடசந்தூர் தாசில்தார் சக்திவேலன், வடமதுரை ஒன்றிய கமிஷனர் ரவிந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ், மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் மற்றும் நகை சரிபார்ப்பு அலுவலர் கிருஷ்ணன், ஆய்வாளர் முத்துசாமி, கோயில் செயல் அலுவலர் கற்பக வெண்ணிலா, திருப்பணி பொறுப்பாளர்கள் பத்மநாபன், முரளிராஜன் உடனிருந்தனர்.