சாலையூர் பழனி ஆண்டவர் கோவில் நாளை கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2023 08:01
அன்னூர்: சாலையூர் பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.
சித்தர்கள் வழிபட்ட பெருமையுடைய சாலையூர் பழனியாண்டவர் கோவில் பல கோடி ரூபாய் செலவில் புதிதாக கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா கடந்த 29ம் தேதி விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. நேற்று காலை அடியார்கள் வழிபாடு நடந்தது. இதையடுத்து விமான கலசங்கள் நிறுவும் நிகழ்வு நடந்தது. 108 வகையான காய், கனி, கிழங்கு மற்றும் மூலிகை பொருட்கள் வேள்வி குண்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, பேரொளி வழிபாடு நடந்தது. காலையில் கங்காதர தேசிகரின் திருமுறை கச்சேரியும், மாலையில் சற்குண ஓதுவாரின் திருப்புகழ் கச்சேரியும் நடந்தது. இன்று காலை பரிவார தெய்வங்களுக்கு எண் வகை மருந்து சாத்துதலும், சண்முக மாலை கச்சேரியும், மாலையில் அனுபூதி கச்சேரியும், இரவு பழனியாண்டவருக்கு எண் வகை மருந்து சாத்துதலும் நடக்கிறது. நாளை காலை 6:30 மணிக்கு விநாயகர், கதிர்காம வேல், சித்தர்கள் கோவில்களுக்கு கும்பாபிஷேகமும் காலை 9:45 மணிக்கு விமான கலசத்திற்கும், மூலவரான பழனி ஆண்டவருக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து தேச மங்கையர்க்கரசியின் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. மாலையில் வள்ளி கும்மியாட்டம் நடக்கிறது.