மேட்டுப்பாளையம்: வேடர்காலனியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. மேட்டுப்பாளையம் அடுத்த சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வேடர்காலனியில், புதிதாக பட்டத்தரசி அம்மன் கோவில், கருவறை, விமானம், மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டன. திருப்பணிகள் முடிந்து இம்மாதம், 18ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை அடுத்து மண்டல பூஜை தினமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு, மண்டலை பூஜை நிறைவு விழா நடந்தது. இதில் வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கார பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர், ஊர் மக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.