திருநெல்வேலி:திருநெல்வேலி, தியாகராஜநகர் விக்ன விநாயகர் கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் விநாயகர் தேரில் வீதி உலா நடந்தது. தியாகராஜநகர் விக்ன விநாயகர் கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை கும்ப பூஜை, ஹோமம், பூர்ணாகுதி, கலசாபிஷேகம், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் விநாயகருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதனையடுத்து உற்சவர் விநாயகர் தேரில் எழுந்தருளி 7 மற்றும் 8வது வடக்கு தெருவில் வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை விக்ன விநாயகர் கோயில் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.