பதிவு செய்த நாள்
01
பிப்
2023
05:02
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே இடிகரையில் உள்ள பள்ளிகொண்ட ரங்கநாதர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இம்மாதம், 3ம் தேதி நடக்கிறது.
விழாவையொட்டி இன்று மாலை, 4:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், தொடர்ந்து ஹோமம், வேத பாராயணம், திவ்ய பிரபந்தம் தொடக்கம், சாற்றுமுறை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை காலை, 7:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, வேதபாராயணம், திவ்ய பிரபந்தம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து மதியம், 12:00 மணிக்கு மூலவர், உற்சவர், அலங்கார திருமஞ்சனம், உற்சவர் யாகசாலையில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு விமான கலச ஸ்தாபனம் நடக்கிறது. நாளை மறுநாள், 3ம் தேதி காலை, 6:00 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் ஹோமம், அதைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. மதியம் அன்னதானமும், பகல், 3:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு, 7:00 மணிக்கு திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.