பாலமேடு: பாலமேடு நாயுடு தெற்கு தெரு படைவெட்டி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜன.,30 கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகபூஜைகள் துவங்கின. நேற்று காலை 4ம் கால யாகபூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதவந்திர முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மன், பரிவார தெய்வங்களுக்கு பட்டு சாத்துதல், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை படைவெட்டி அம்மன் கோயில் 8 வீட்டு பங்காளிகள் செய்திருந்தனர்.