திருச்செந்தூர் 3 நாட்கள் பாதயாத்திரை சென்ற பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2023 05:02
பெருநாழி: பெருநாழி அருகே முஷ்டகுறிச்சி கிராமத்தில் இருந்து திருச்செந்தூர் தைப்பூச விழாவில் கலந்து கொள்வதற்காக சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மூன்று நாள் பாதயாத்திரை பயணத்தை துவக்கினர். 45 ஆண்டுகளாக தொடரும் இந்த பாதயாத்திரையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரதம் இருந்து மாலையணிந்து அரோகரா கோஷம் முழங்க செல்கின்றனர். முஷ்டகுறிச்சி திருச்செந்தூர் முருகன் கோயில் குருசாமி தலைமையில் நூற்றுக்கணக்கானோர் செல்கின்றனர். வருகிற பிப்.5ம் தேதி திருச்செந்தூரில் நடக்கும் தைப்பூச விழாவில் பங்கேற்க, நேர்த்திக்கடன் பூஜைகளை நிறைவேற்ற உள்ளனர்.