பதிவு செய்த நாள்
03
பிப்
2023
05:02
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள சக்திமாரியம்மன் கோவில் ஆண்டு விழாவை முன்னிட்டு, பால்குட ஊர்வலம் நடந்தது. காலை 7:30 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பெண்கள் பால்குடம் எடுத்தனர். ஊர்வலம் முக்கிய வீதி உள்ள வழியாக சென்று கோவிலை அடைந்தது. அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பகல் 1:30 மணிக்கு அம்மனுக்கு சோடசோபச்சார தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 8:00 மணிக்கு உற்சவ மூர்த்தி அம்மன் மேளதாளம் முழங்க வீதி உலா நடந்தது. கோவில் நிர்வாகி சக்திவேல், நகர மன்ற தலைவர் முருகன், தொழிலதிபர்கள் தியாகராஜன், செல்வராஜ், கண்ணப்பன், டாக்டர் பால்ராஜ், சாந்திபால், தி.மு.க., நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், அவைத்தலைவர் குணா, கவுன்சிலர்கள் தங்கராஜ், கோவிந்து, துரைராஜ், முன்னாள் கவுன்சிலர் வெங்கட், ஜெய்சங்கர், சங்கர், ராஜ்குமார், கல்யாண்குமார், சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.