வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூச விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2023 09:02
கடலூர்: வடலூர் வள்ளலார் ஞான சபையில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக துவங்கியது.
வடலூரில் பார்வதிபுரத்தில் உள்ள ஞானசபையில் பூச நட்சத்திர தினத்தில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கும். தை மாதத்தில் அவர் முக்தியடைந்ததால் தைப்பூச தினத்தன்று 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இந்த ஆண்டுக்கான விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இன்று காலை 5 மணிமுதல் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு மருதூர் வள்ளலார் சன்னதியில் மருதூர் கிராமவாசிகளால் கொடியேற்றப்பட்டது. நற்கருங்குழியில் உள்ள வள்ளலார் சன்னதியில் நற்கருங்குழி கிராமவாச களால் கொடி கொடியேற்றப்பட்டது. பார்வதிபுரத்தில் உள்ள வள்ளலார் ஞானசபையில் காலை 10 மணிக்கு தைப்பூச விழாவிற்கான கொடியேற்று விழா நடைபெற வுள்ளது. தொடர்ந்து 5தேதி தைப்பூச தினத்தன்று காலை 6 மணி, 10 மணி, நண்பகல் 1 மணி இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் அதிகாலை 5.30 மணி என 6 வேளைகளில் 7 திரைகளை நீக்கி ஞானசபையில் ஜோதி தரிசனம் நடக்கவுள்ளது. 7ம் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணிவரை வள்ளலார் முக்தியடைந்த சித்தி வளாகத் திருஅறை தரிசனம் நடைபெறும்.