ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் தீர்த்த குளத்தில் தைப்பூசம் தெப்ப தேரில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் உலா வந்தனர். நேற்று தைப்பூசம் விழா யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். பின் திருக்கோயில் உபகோயிலான லட்சுமணேஸ்வரர் கோயிலில் எழுந்தருளினர். பின் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து லட்சுமணேஸ்வரர் தீர்த்த குளத்தில் அலங்கரித்த தெப்ப தேரில் சுவாமி, அம்மன் மற்றும் முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் எழுந்தருளியதும், தேரின் வடத்தை பக்தர்கள் இழுத்து தெப்பத்தை 11 தடவை சுற்றி வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.