பதிவு செய்த நாள்
07
பிப்
2023
11:02
பழநி: பழநி தைப்பூச திருவிழாவில் இன்று தெப்ப தேர் திருவிழா நடைபெறும்.
பழநி, கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில், தைப்பூச திருவிழா, ஜன.29ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.புதுச்சேரி சப்பரம்,தந்த பல்லாக்கு, வெள்ளி ஆட்டுக்கடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்க குதிரை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு ரதவீதியில் நடைபெற்று வருகிறது. தைப்பூச திருவிழா உற்சவத்தில் ஆறாம் நாளான பிப்.3ல் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்று, இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி ரத வீதியில் எழுந்தருளினார். பிப்.4. பெரியநாயகி அம்மன் கோயில் தேரடியிலிருந்து திருத்தேரோட்டம் நடந்தது. பிப்.6ல் காலையில் புதுச்சேரி சப்பரத்திலும், இரவு 9:00 மணிக்கு பெரிய தங்கமயில் வாகனத்திலும் சுவாமி எழுந்தருளினார். இன்று (பிப்.7 ல்) மாலை 7:00 மணிக்கு தெப்ப தேர் திருவிழா நடைபெற உள்ளது. இரவு கொடி இறக்குதல் நடைபெற்று தைப்பூச உற்சவம் நிறைவு பெற உள்ளது.