குழந்தைகள் வடம் பிடிக்க வலம் வந்த அவிநாசி லிங்கேஸ்வரர் தேர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2023 05:02
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் தேர் குழந்தைகள் வடம் பிடித்து நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது.
அவிநாசி: தைப்பூச திருநாளை முன்னிட்டு அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு திரவியங்களால் அபிஷேகமும், வேதபாராயணம், திருமுறை வழிபாடு, மஹா தீபாரதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு திருத்தேரில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி 7 மணி முதல் 8 மணி வரை சித்திரை திருவிழாவிற்கான சுப முகூர்த்தம் நடைப்பெற்றது. மாலை 4 மணிக்கு சுப்ரமணியர் தேர் குழந்தைகள் வடம் பிடித்து இழுக்க நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தடைந்தது. தைப்பூச தேர் விழாவிற்கான ஏற்பாடுகள் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன்,பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார் வழிபாட்டு குழுவினர்கள் செய்திருந்தனர்.