கோவில்பட்டி: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோவில்பட்டியில் பால்குட ஊர்வலம் நடந்தது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பிருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தில், ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்துச் சென்றனர். இதில் பக்தர்கள் சிலர் காவடி, அலகு குத்திய நிலையில் சென்றனர். ஊர்வலம், எட்டயபுரம் சாலை, கதிரேசன் கோவில் சாலை வழியாக சொர்ணமலை கதிரேசன் கோவில் அடைந்தது. அங்கு கதிர்வேல் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தனர் . அதைத் தொடர்ந்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் பரமசிவம், மாவட்டச் செயலாளர் அய்யம் பெருமாள் ஆகியோர் தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.