முதல் அறுவடை நெல் அழகர்கோவிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2023 09:02
சோழவந்தான்: மதுரை மேற்கு ஒன்றியம் தேனூரில் இருந்து பாரம்பரியமாக முதல் அறுவடை நெல்லை அழகர்கோவிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
அழகரின் சொந்த ஊரான தேனூரில் இருந்து ஆண்டுதோறும் முதல் நெல் அறுவடை செய்து அழகர்கோயிலுக்கு வழங்கி வருகின்றனர். முதல் அறுவடையின் ஒரு பங்கை கையாலயே அறுவடை செய்து, நெல் அடித்து அதனை அலங்கரித்து தேனூர் மலையான் சாவடிக்கு கொண்டு சென்றனர். மேலும் மதவேறுபாடின்றி அனைத்து தரப்பினரின் நிலங்களில் இருந்தும் அறுவடை செய்து அழகருக்கு வழங்குவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு கிருஷ்ணன் சங்கர் நிலத்தில் இருந்து அறுவடை செய்து கிராம நாட்டாண்மை ராமசாமி, ஓட்டடுக்கு சுப்பிரமணி, விவசாய சங்க தலைவர் செல்லம் ஆகியோரின் முன்னிலையில் கதிர் அறுவடை செய்து, அழகர் கோவிலுக்கு செலுத்தும் முதல் படி நெல்லை வயிக்கோல் பிரியில் கோட்டையாக கட்டி, தீபாதரணை செய்து வழிபட்டனர். பின்னர் கள்ளழகர் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர்.