பதிவு செய்த நாள்
11
பிப்
2023
12:02
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு அங்காளம்மன், ஆனந்தாய், பூங்காவனம் கோவிலில் மண்டல அபிஷேக பூர்த்தி விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று மதியம் 1:00 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் அங்காளம்மன், ஆனந்தாயி, பூங்காவனம் அம்மன் மற்றும் விநாயகர், உண்ணாமலை சமேத அண்ணாமலையார், துர்க்கை அம்மன், புற்று நாக சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் அங்காளம்மன், ஆனந்தாயி, பூங்காவனம் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உள் புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி த ரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, திருப்பணிக் குழுக மிட்டி நிர்வாகிகள் மற்றும் பூசாரிகள் சின்ராஜ், தண்டபாணி செய்திருந்தனர்.