காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2023 06:02
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தை யொட்டி, கோயிலுக்குச் சொந்தமான விடுதிகளில் உள்ள தங்கும் அறையகளை வாடகைக்கு விடப்படும் அறைகள் 13-02-2023 முதல் 26-02-2023 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று கோயில் கே.வி.சாகர் பாபு தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவிக்கையில் பிரம்மோற்சவத்தில் பணிபுரிய வரும் பல்வேறு துறை ஊழியர்கள், பல்வேறு துறை அலுவலர்கள், பிரம்மோற்சவத்திற்க்கு வரும் கலைஞர்கள் ஆகியோர்களின் வசதிக்காக இந்த அறைகள் ஒதுக்கப்படும் என்றார். மேலும் பிரம்மோச்சுவத்திற்காக அனைத்து ஏற்பாடுகளும் ( பனிகளும்) நிறைவடைந்த நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.குறிப்பாக மின் விலங்குகள் அலங்காரம், வரவேற்பு தோரணங்கள், கோயில் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றின் கரை இரு புறமும் மின்விளக்குகள் அலங்காரம் உட்பட கோயில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி கோயிலுக்குள் கூடுதல் வரிசைகள் எனவும் கோயில் அருகில் உள்ள தூர்ஜடி கலை அரங்கம் என அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு அடைந்து வருவதாக தெரிவித்தார்.