புவனகிரி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 6ம் ஆண்டு பூர்த்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2023 04:02
புவனகிரி: புவனகிரியில் உள்ள கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் 6 ம் ஆண்டு பூர்த்தி விழா, அக்னி பிரேவேச நிகழ்ச்சி மற்றும் சுயவர கால பார்வதி ஹோமம் நிகழ்ச்சி நடந்தது. கடலுார் மாவட்டம், புவனகிரியில் ஆரியவைசியால் செட்டியார் சமுகத்தினர் கன்னிகாபரமேஸ்வரி கோவில் கட்டி கும்பாபிேஷகம் நடத்தினர். அதனைத்தொடர்ந்து ஆண்டு தோறும் கும்பாபிேஷகதினத்தில் ஆண்டு பூர்த்தி விழா மற்றும் அக்னி பிரேவேச நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். தற்போது 6 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, நேற்று முன் தினம் ஸ்ரீவரசித்தி வினாயகர் கோவிலில் இருந்து சங்க உறுப்பினர்கள் பால்க் குடங்களை, ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு அபிேஷகம் செய்தனர். பின்னர் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. நிகழ்ச்சியில் அந்த சமுகத்தினர் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை சங்கத் தலைவர் சுந்தரசேன் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர். தொடர்ந்து ஸ்ரீவாசவி மகாலில் சுயவரம் கால ஹோமம் நிகழ்ச்சி மற்றும் புஷ்ப யாகத்தில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த திருமணமாத இளைஞர்கள், தங்கள் பெற்றோர்களுடன் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தி தங்கள் ஜாதகத்தை பரிவர்த்தனை செய்து கொண்டனர்.