பதிவு செய்த நாள்
13
பிப்
2023
05:02
மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்.,23 முதல் மே 8 வரை நடை பெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: மே 2ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், மே 03ம் தேதி திருத்தேரோட்டம், மே 04ம் தேதி எதிர் சேவை , மே 05 ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழா 2023
ஏப்ரல் 23, 2023– ஞாயிறுக்கிழமை – சித்திரை திருவிழா கொடியேற்றம் – கற்பக விருக்ஷ, சிம்ம வாகனம்
ஏப்ரல் 24, 2023 – திங்கள்கிழமை – பூத , அன்ன வாகனம்
ஏப்ரல் 25, 2023- செவ்வாய்கிழமை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
ஏப்ரல் 26, 2023 – புதன்கிழமை – தங்க பல்லக்கு
ஏப்ரல் 27, 2023– வியாழக்கிழமை – வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்
ஏப்ரல் 28, 2023– வெள்ளிக்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்
ஏப்ரல் 29, 2023– சனிக்கிழமை- நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்
ஏப்ரல் 30, 2023– ஞாயிறுக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலா
மே 01, 2023– திங்கள்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா
மே 02, 2023– செவ்வாய்கிழமை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் யானை வாகனம் , புஷ்பபல்லக்கு
மே 03, 2023– புதன்கிழமை – திரு தேர் – தேரோட்டம் (ரத உட்சவம்) – சப்தாவர்ண சப்பரம்
மே 04, 2023 – வியாழக்கிழமை – தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவை. இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை
மே 05, 2023 – வெள்ளிக்கிழமை – கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல்.