மாசி மாத பிறப்பு : ஆதிகும்பேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2023 05:02
கோவை : கோவை ராம்நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் தமிழ் மாசி மாதம் என்கிற கும்ப மாதம் பிறந்ததையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள ஆதிகும்பேஸ்வருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளை நிறவேஷ்டி மற்றும் செந்நிற பட்டு அங்கவஸ்த்திரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளாக பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.