பதிவு செய்த நாள்
13
பிப்
2023
05:02
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை, இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் வரும் 18 ம்தேதி மகா சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடைபெற விருக்கிறது. மகா சிவராத்திரியன்று இங்கு வந்து, ஒவ்வொரு காலமும் நடைபெறுகிற பூஜைகளில் கலந்துகொண்டு சிவபெருமானைத் தரிசித்தால், வீடு- மனை வாங்கும் யோகம், நல்ல உத்தியோகம், பெண்களுக்கு நல்ல வரன் அமையும்; குழந்தைச் செல்வத்துடன் சகல சந்தானங்களும் கிடைத்து நிம்மதியாக வாழ்வர் என்பது ஐதீகம்.
விழாவை முன்னிட்டு 18 ம்தேதி காலை காலை 10.30 – 12.30 மணிக்கு 1008 சங்காபிஷேகம், மாலை 3.00 மணி முதல் சனிப்பிரதோஷ வழிபாடு, இரவு 10.00 மணிக்கு சிவராத்திரி முதல் கால அபிஷேகம் மற்றும் 1008 சங்காபிஷேகம், நள்ளிரவு 12.00 மணிக்கு இரண்டாம் கால அபிஷேகம், இரவு 2.00 மணிக்கு மூன்றாம் கால அபிஷேகம், அதிகாலை 4.00 மணிக்கு நான்காம் கால அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து 19ம் தேதி காலை சாயர ைக்ஷ, அர்த்தஹஜாமம், பள்ளியறை, திருவனந்தல் வழிபாடு நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கண்காணிப்பாளர் கணபதி ராம் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.