பதிவு செய்த நாள்
16
பிப்
2023
10:02
வெள்ளலூர்: வெள்ளலூர், வெள்ளாளபாளையத்தில் உள்ள கொண்டத்து மாகாளியம்மன் கோவிலின், 163 வது குண்டம் திருவிழா கடந்த, 31ல் சாமி சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, 7ல் அக்னி சாட்டும், 10ல் குண்டம் திறப்பு, 108 திருவிளக்கு வழிபாடு நடந்தன , 12ல் அரசண்ணன் கோவிலிலிருந்து கோபாலகிருஷ்ணன், வேலு தலைமையில், 200 க்கும் மேற்பட்டோர் பால் குடம் எடுத்து கோவிலை வந்தடைந்தனர். 13 இரவு கொடி கட்டுதல், ஈஸ்வரி கோவிலிலிருந்து முளைப்பாரி எடுத்து வருதலும், 14, மாலை முதல் புண்ணியார்ச்சனை, தீர்த்த காவடிகள் பூஜை, குண்டம் வளர்த்தல், நள்ளிரவு அம்பன் அழைத்தல் ஆகியவை நடந்தன. நேற்று அதிகாலை அம்மன் ஆற்றுக்கு புறப்பட்டு சென்று, மீண்டும் தீர்த்த கரகத்துடன் கோவிலை வந்தடைந்தது. இதையடுத்து. முற்பகல் குண்டம் இறங்குதல் நடந்தது. கோவில் பூசாரி முதலில் குண்டம் இறங்க, ஆண்கள், பெண்கள் அவரை பின் தொடர்ந்தனர். இதன் தொடர்ச்சியாக அக்னி அபிஷேக ஆராதனை, அன்னதானம், மாலை மாவிளக்கு பூஜையும் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று மஞ்சள் நீராடுதல் நடந்தது. இன்று அம்மன் திருவீதி உலா, அம்மன் ஊஞ்சல் தாலாட்டு பூஜை நடக்கின்றன. 22ல் பிளேக் மாரியம்மன், மதுரைவீரன், முனியப்ப சுவாமிகளுக்கு மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.