ஷட்" என்றால் ஆறு, திலா" என்றால் எள். ஆறுவகையான எள் தானத்தை முன்னிலைப்படுத்துவது ஷட்திலா ஏகாதசி. ஒரு அற்புதமான நாளாக ஷட்திலா ஏகாதசி" விளங்குகிறது.
புராணக் கதை: பூலோகத்தில் வாழ்ந்த பெண் ஒருத்தி தான் செய்த புண்ணிய பலன் காரணமாக மனித உடலோடு சொர்க்கம் செல்லும் பாக்கியம் பெற்றால். சொர்க்க லோகத்தில் தனக்கு அத்தனை வசதிகள் இருந்தாலும் தன்னால் நேரத்திற்கு, தான் விரும்பிய உணவு கிடைக்காமல் அவதியுற்றார். அப்போது அங்கே ஒரு துறவி உருவத்தில் வந்த பெருமாளிடம் தனது இந்த நிலை குறித்து கூறி, அதற்கான காரணம் என்ன என்று கேட்டாள். இதையறிந்து, அந்த பெண்ணிடம் பெருமாள் பெண்ணே, மண்ணுலகில் பாவம் தீர்க்கும் விரதம், ஏகாதசி விரதம். அதில் ஒவ்வொரு விரதமும் ஒவ்வொரு பலன் தரும். குறிப்பாக மாசி மாதம் தேய்பிறையில் வரும் ஷட்திலா ஏகாதசி விரதத்தைக் கடைபிடித்தால் சகல பாவங்களும் நீங்கும். அன்றைய திதியில் விரதமிருந்து அன்னதானம் செய்ய அன்னத்துக்கு குறைவே வராது. பசிப்பிணியை போக்கும் அருமருந்து ஷட்திலா ஏகாதசி.
உன்னைப் பற்றித் தகவல்கள் கேட்டு உன்னை தரிசிக்க தேவலோகத்திலிருந்து பெண்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். நீ அவர்களிடம் எப்படியாவது அவர்கள் மேற்கொண்ட ஷட்திலா ஏகாதசி விரத பலன்களை கேட்டுப் பெற்றால் இந்தப் பிணி நீங்கப் பெறுவாய் என்று சொல்லி மறைந்தார். வந்து வழிகாட்டியவர் அந்த பெருமாளே என்பதை அறிந்த அந்தப் பெண், தேவலோகப் பெண்கள் வருமுன் சென்று அறைக்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டாள். தேவலோக பெண்கள் அறை கதவை தட்டி இவளின் தரிசனத்திற்காக வேண்டி நின்றனர். உங்களின் ஒருநாள் ஷட்திலா ஏகாதசி விரத பலனை தந்தால் நான் தரிசனம் தருகிறேன்" என்று சொன்னாள். வேறு வழியின்றி அவர்களும் ஒத்துக்கொள்ள அவள் அந்தப் புண்ணிய பலனைப் பெற்றுத் தன் பசிப்பிணியை போக்கிக்கொண்டாள். மேலும் இந்த நாளில் எளியவர்களுக்கு அன்னதானம் செய்தால், முன் செய்த பாவங்கள் நீங்கி காலமெல்லாம் பசிப்பிணி இல்லாத வாழ்வைப் பெறலாம்.