காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா : பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2023 03:02
காளஹஸ்தி: திருப்பதி, காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி வரும் 18ஆம் தேதி கோலாகலமாக நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு இது குறித்து பேசுகையில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் வரும் 18 ஆம் தேதியன்று மகா சிவராத்திரி( சிறப்பு) பர்வ தினத்தில் சாதாரண பக்தர்களுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்க உள்ளதாகவும் இந்த ஆண்டு மூலவர் சன்னதியில் தரிசனத்தை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பிரபலங்களுக்கும் சாதாரண பக்தர்கள் என அனைவருக்கும் "மகா லகு" தரிசனம் என்றும் , குறுக்கு வழியில் தரிசனத்திற்கு யாரையும் அனுமதிக்காமல் கோயிலின் நுழைவாயிலில் இருந்து கோயிலுக்குள் சென்ற பக்தர் சாமி தரிசனம் செய்து கொண்டு வெரும் 20 நிமிடங்களில் வெளியில் வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் செய்துள்ளதாக தெரிவித்தனர்.
குறிப்பாக லிங்கோத்பவ தரிசதனத்தை பக்தர்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி இலவச தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பக்தர்களின் சந்திருப்திகர தரிசனம் ஏற்படுத்துவதே தங்களின் லட்சியம் என்றும் தெரிவித்தனர் . இதற்காக அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும் என்றும் கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆன்மீக சிந்தனை பெருக்கும் வகையில் தூர்ஜடி கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். பொறியல் துறை பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததாகவும் குறிப்பாக மின்விளக்குகள் அலங்காரம் கண்களைக் கவரும் வகையில் உள்ளதாகவும் பக்தர்களை கவரும் வகையில் மலர் அலங்காரம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர். மகா சிவராத்திரி அன்று மட்டும் கோயில் வளாகத்தில் உள்ள மூன்றாவது கோபுரமான திருமஞ்சன கோபுர வழியை அடைக்க உள்ளதாகவும் மற்ற மூன்று கோபுர வழியில் வழக்கம் போல் பக்தர்களை அனுமதிக்க உள்ளதாகவும், சாமி தரிசனம் செய்த பின்னர் முருத்யுஞ்சய சுவாமி சன்னதி அருகில் இருந்து பக்தர்கள் வெளியே வரலாம் அல்லது கோயிலின் மேல் பகுதியில் இருந்தும் வரலாம் இல்லையேல் நுழைவாயில் பகுதியிலேயே ஒரு பகுதியில் இருந்தும் வெளி வரலாம் என்றும் தெரிவித்தனர்.மேலும் வரிசைகளில் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி குடிநீர் மோர் மற்றும் குழந்தைகளுக்கு பால் ஆகியவை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
உள்ளூர் பக்தர்களுக்கு 500 டிக்கெட்டை 200 ரூபாய்க்கு குறைத்துள்ளதாகவும் இதனை 3 நாட்களுக்கு முன்னதாகவே பக்தர்களுக்காக விற்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் பிரபலங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கு எந்தவித முக்கியத்துவம் கொடுக்காமல் தற்போது எம்எல்சி தேர்தலின் விதிமுறைகள் அமலில் உள்ளதால் அரசியல்வாதிகளுக்கு எந்தவித சிறப்பு வரவேற்பு , ஆசீர்வாதம் செய்வதை நிறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர் .மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடத்த அறநிலைத்துறை 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததாகவும் அதில் நீண்ட தூரப் பகுதியில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக மின்விளக்குகள் அலங்காரம் மற்றும் மலர் அலங்காரங்கள் ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவித்தனர். பக்தர்களின் வசதிக்காக தற்போது சிறப்பு குளியலறைகள் மற்றும் கழிப்பறைகளை ஏற்பாடு செய்திருப்பதாகவும் இதுவரை நிரந்தர மாக 80 கழிப்பறைகளை கட்டப்பட்டுள்ளதாகவும் மகா சிவராத்திரி அன்று 180 நடமாடம் கழிப்பறைகள ஏற்பாடு செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.இந்த மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தில் அனைவரின் ஒத்துழைப்போடு உற்சவமூர்த்தி களுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஊர்வலத்தின் போது ஜமீன்தார்கள் சமயத்தில் பயன்படுத்தியப்பட்ட திவ்ய ஆபரணங்களுடன் சாமி அம்மையார் களுக்கு அலங்கரிக்கப்பட்டதோடு பழம் மற்றும் மலர்களால் பக்தர்களை கவரும் வகையில் சிறப்பு அலங்காரம் இவ்வாண்டின் சிறப்பாகும் என்று தெரிவித்தனர். .பக்தர்களுக்கு தேவையான பிரசாதங்கள் தட்டுப்பாடு வராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திட்டமிட்டு தினந்தோறும் பக்தர்களுக்கு தேவையான அளவில் பிரசாதங்களை தயாரித்து வழங்குவதாகவும் மகா சிவராத்திரி அன்று ஒன்றரை லட்சம் லட்டுகள், மற்றும் வடை கள் புளியோதரை ஜிலேபி போன்ற பிரசாதங்களை வைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.