மகா சிவராத்திரி: சதுரகிரியில் பக்தர்களுக்கு வனத்துறை கட்டுப்பாட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2023 06:02
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரி, மாசி அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு இன்று பிப்ரவரி 18 முதல் 21 வரை, நான்கு நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் பக்தர்களுக்கு வனத்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தற்போது மலைப்பகுதியில் கொளுத்தும் வெயிலினால் கோயிலுக்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்கள் பீடி, சிகரெட் தீப்பெட்டிகள், லைட்டர்கள் உட்பட எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு கருதி பாலித்தீன் கவர்கள், கேரி பைகள் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். வனப்பகுதியில் காலி தண்ணீர் பாட்டில்களை வீசக்கூடாது. ஓடையில் குளிக்க கூடாது. தினமும் காலை 6:00மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு செல்லும் பக்தர்கள் மாலை ஆறு மணிக்குள் மீண்டும் திரும்பி விட வேண்டும். இரவு தங்குவதற்கு அனுமதி கிடையாது. இதனை எல்லாம் மீறுபவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.