Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நமச்சிவாய கோஷம் முழங்க இரவு ... சதுரகிரியில் மஹா சிவராத்திரி வழிபாடு : பக்தர்கள் தரிசனம் சதுரகிரியில் மஹா சிவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹா சிவராத்திரி: அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை, லட்சத்தீபம்
எழுத்தின் அளவு:
மஹா சிவராத்திரி: அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை, லட்சத்தீபம்

பதிவு செய்த நாள்

19 பிப்
2023
09:02

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மஹா சிவராத்திரி விழாவில் நடந்த லட்சார்ச்சனையை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். மகா சிவராத்திரி முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம்  அருகே உள்ள சக்கரகுளத்தில் லட்சத்தீபம் ஏற்றப்பட்டது.
 

மாசி மாதம், அமாவாசைக்கு முன்பு வரக்கூடிய திரயோதசி மற்றும் சதுர்த்தசி திதிகள் சந்திக்கும் நாளில், பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும், யார் பெரியவர் என்ற அகந்தையை ஒழித்து, ஜோதிப்பிழம்பாகவும், லிங்கோத்பவர் வடிவாகவும்,  அருணாசலேஸ்வரர்  காட்சி கொடுத்த தலம் திருவண்ணாமலை. அவ்வாறு காட்சி கொடுத்த நாள், மஹா சிவராத்திரி விழா நடக்கிறது.


இதையொட்டி நேற்று அதிகாலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மூலவர் மற்றும் உற்வச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அதிகாலை,  5:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை,  லட்சார்ச்சனை நடந்தது.   இரவு, 7:30 மணிக்கு,  முதல் கால பூஜை, இரவு, 11:30 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு, சுவாமி மூல கருவறையின் பின்புறமுள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம், இன்று அதிகாலை, 2:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை, 4:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடத்த, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar