கூடலுார்: கூடலுாரில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈஸ்வரன் கோயிலில் பல ஆண்டுகளுக்குப் பின் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
கூடலுார் தாமரைக்குளம் ரோட்டில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான ஈஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயில் சீரமைப்பின்றி அழியும் நிலையில் உள்ளது. இதனால் கோயிலில் நூறு ஆண்டுகளுக்கு மேல் எவ்வித விழாவும் நடைபெறவில்லை. சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பக்தர்கள் தொடர்ந்து வழியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இக் கோயிலை கட்டிய கேரளா பூஞ்சாற்று தம்பிரான் அரச குடும்ப வாரிசான ராஜா ஸ்ரீஜித் கலந்து கொண்டார். நான்கு கால பூஜை நடந்தது. தேவாரம், திருவாசகம், பாராயணம், சிவபுராணம் பாடப்பட்டது. பஜனை பாடல்கள் பாடினர். சிவனுக்கு சிறப்பு பூஜை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. கூடல் சுந்தரவேலர் கோயிலிலும், சேலை சீலைய சிவன் கோயிலிலும் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இரவு முழுவதும் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.