வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு குரு காசி விஸ்வநாதர் கோயில், விசாலாட்சி அம்மன் கோவில் கலியுக சிதம்பர ஈஸ்வரர் கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
* கலியுக சிதம்பர ஈஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை அன்று நந்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. சிவராத்திரி முதல் கால பூஜை மகா அபிஷேகம், இரண்டாம் கால பூஜை முடிந்து நள்ளிரவு மின் அலங்கார சப்பரத்தில், உற்சவமூர்த்தியுடன் சாமி பெட்டி சாமியாடிகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. நள்ளிரவு மூன்றாம் காலையாக பூஜை அபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை நான்காம் கால பூஜை அபிஷேகம் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று கோயிலில் இருந்து பெட்டி எடுத்து சாமியாடிகளுடன் பூசாரிபட்டிக்கு சென்றது.
* குரு காசி விஸ்வநாதர் கோயிலில் நள்ளிரவு பூஜைகள், சிவபுராணம், சிறப்பு அலங்காரம் அபிஷேகங்கள் நடந்தது.