Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ... பழநி மாரியம்மன் கோவிலில் இன்று கம்பம் கம்பம் சாட்டும் விழா பழநி மாரியம்மன் கோவிலில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகத் தேரோட்டம் : 28ல் கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகத் தேரோட்டம் : 28ல் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

21 பிப்
2023
10:02

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மகத் தேரோட்ட, கொடியேற்றம், இம்மாதம், 28 ம் தேதி நடைபெற உள்ளது.

கோவை மாவட்டத்தில் வைணவ ஸ்தலத்தில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா, வைகுண்ட ஏகாதசி, மாசி மகத் தேரோட்டம் ஆகிய விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி மாத தேர் திருவிழா, இம்மாதம், 27ம் தேதி கிராம சாந்தியுடன் தூங்குகிறது. 28ம் தேதி கொடியேற்றமும், அன்று இரவு அன்ன வாகனத்திலும், மார்ச் ஒன்றாம் தேதி சிம்ம வாகனத்திலும், அடுத்து அனுமந்த வாகனத்திலும், அரங்கநாதர் பெருமாள் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். அதை தொடர்ந்து மூன்றாம் தேதி கருட சேவையும், நான்காம் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், ஐந்தாம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. அன்று இரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. ஆறாம் தேதி காலை ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். அதைத் தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. ஏழாம் தேதி குதிரை வாகனத்தில் பரிவேட்டையும், எட்டாம் தேதி சேஷ வாகனத்தில் தெப்போற்சவமும், ஒன்பதாம் தேதி சாற்று முறை சந்தான சேவை உற்சவமும், பத்தாம் தேதி விழா நிறைவு நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar