காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆன்மீக சொற்பொழிவாளர் சாகன்டி.கோட்டீஸ்வர ராவ் தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2023 10:02
காளஹஸ்தி: திருப்பதி, காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆன்மீக சொற்பொழிவாளர் சாகன்டி.கோட்டீஸ்வர ராவ் குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை கோயில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு மற்றும் உறுப்பினர்கள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சாமி படத்தையும் கோயில் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர்.