பதிவு செய்த நாள்
22
பிப்
2023
07:02
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இக்கோயிலில் தெப்ப உத்ஸவம் பிப்.26 ல் துவங்கி பதினொரு நாட்கள் நடைபெறுகிறது. அப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்றனர். அதற்கான குடிநீர்,கழிப்பறை,பஸ் நிறுத்தம், கார் நிறுத்தம்,தெருவிளக்கு,சுவாமி தரிசன வரிசை குறித்து நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தேவோட்டை ஆர்.டி.ஓ.பால்துரை, துணை இயக்குனர் (கிராம ஊராட்சிகள்) குமார், தாசில்தார் வெங்கடேஷ், தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியோன், ஊராட்சித் தலைவர் சுப்பிரமணியன், துணைத் தாசில்தார் செல்லமுத்து, இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லத்துரை, எஸ்.ஐ.சண்முகம், உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேவஸ்தானம் சார்பில் 15 இடங்களில் 500 லி அளவில் குடிநீர் தொட்டிகள் அமைக்கவும், பக்தர்களுக்கு வசதிகள் செய்யவும், மதுரை, திருப்புத்தூர், காரைக்குடி,சிவகங்கை ரோடுகளில் தற்காலிக பஸ்கள் நிறுத்துமிடமும், வாகன நிறுத்தமும் தேர்வு செய்யப்பட்டது. ஏற்பாடுகள் குறித்து மீண்டும் பிப்.25ல் ஆய்வு நடத்தவும் முடிவானது.