திருச்செந்துாரில் மாசித் திருவிழா 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2023 08:02
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா வரும் 25ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முக்கிய திருவிழாவான மாசித்திருவிழா வரும் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 12 நாட்கள் நடக்கிறது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அன்று யில் அதிகாலை 1:00 மணிக்கு ந டைதி ற க்கப்பட்டு , 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. 5 மணிக்கு யில் செப்பு கொடிமரத்தில் டியேற்றம் நடக்கிறது. கொடி மரத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. ஏழாம் திருவிழாவான 3ம் தேதி அதிகாலை 1:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 5:00 மணிக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெட்டி வேர் ரத்தில் எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் ரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. 8ம் திருவிழாவான 4ம்தேதி அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி ரத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. அன்றைய தினம் காலை 11:30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் பச்சை நிற கடைசல் ரத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருவிழாவான 6ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 11ம் திருவிழாவான 7ம் தேதி திருவிழா நடக்கிறது. 12ம் திருவிழாவான 8ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் கோயில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் செய்து உள்ளனர்.