பதிவு செய்த நாள்
23
பிப்
2023
04:02
அன்னூர்: அச்சம்பாளையம், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (24ம் தேதி) நடக்கிறது.
அச்சம்பாளையம், மாகாளியம்மன் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து விநாயகர், முருகன், மாகாளியம்மன், துர்க்கை, ராகு, கேது, கருப்பராயன் மற்றும் கன்னிமார் தெய்வங்களுக்கான கும்பாபிஷேக விழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது, பக்தர்கள் காப்பு கட்டினர், செல்வ விநாயகர் கோவிலில் இருந்து செண்டை மேளம் முழங்க, தீர்த்த குடம் முளைப்பாலிகைகளுடன் கோவிலுக்கு பக்தர்கள் சென்றனர். முதற்கால வேள்வி பூஜை நடந்தது. இன்று காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், எண் வகை மருந்து சாத்துதலும், மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது. நாளை (24ம் தேதி) காலை 7:00 மணிக்கு, விமான கோபுரம் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு நடன நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.