பதிவு செய்த நாள்
25
பிப்
2023
12:02
பல்லடம்: கரடிவாவி, ஸ்ரீ கவயகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடந்தது.
பல்லடம் அடுத்த, கரடிவாவி கிராமத்தில் ஸ்ரீகவயகாளியம்மன் கோவில் உள்ளது. பல்வேறு கிராம மக்களின் குலதெய்வமாக உள்ள இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக, பிப்., 22 அன்று, மகா கணபதி, நவக்கிரக ஹோமம், தன் பூஜை ஆகியவற்றுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மறுநாள், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப ஸ்தாபனம், முதல் மற்றும் இரண்டாம் கால வேள்வி, வேதபாராயணம், விமான கலசம் வைத்தல் ஆகாயவையும், நேற்று மூன்று மற்றும் நாற்காம் கால வேள்வி உள்ளிட்டவை நடந்தன. காலை, 10.00 மணிக்கு, பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்கள் எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பெரிய களந்தை சுந்தர கணேசன் சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் கோவில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.