சக்ர பகவதி அம்மன் கோயிலில் லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2023 08:02
சென்னை: செனாய் நகர் ஸ்ரீ சக்ர பகவதி அம்மன் கோயிலில் பொது தேர்வு எழுத மாணவர்களுக்காக சிறப்பு ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
சென்னை செனாய் நகர் மஹா மேரு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சுவாமிக்கு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் வேதபட்டாச்சாரியார்களால் நடைபெற்றது. இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெற பெற வேண்டி சுவாமிக்கு 1008 சாஸ்திர நாமம் முழங்க சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொள்வதற்காக அப்பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். மேலும் பூஜையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சன்னிதானத்தில் பூஜிக்கப்பட்ட பேனா, தேர்வுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.