பதிவு செய்த நாள்
01
மார்
2023
10:03
கோவை : கோவையின் காவல் தெய்வம் கோனியம்மன் தேர் திருவிழா இன்று (மார்ச்-1ல்) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி கோவை ராஜவீதியில் உள்ள தேர்த் திடலில் நிற்கும் தேருக்கு அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் உப்பு, மிளகு இரண்டும் கலந்து வீசி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
கோனியம்மன் கோவில் அம்மனுக்கு, திருக்கல்யான உற்சவம் விமரிசையாக நேற்று நடந்தது. கோவை , கோனியம்மன் கோவில் திருத்தேர் திருவிழா, கடந்த பிப்., 21ல்
கொடியேற்றம் மற்றும் அக்னிச்சாட்டுடன் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து புலி, கிளி வாக னங்களில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு கோனியம்மன் அருள்பாலித்தார். நேற்றிரவு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை , திருத்தேருக்கு அம்மன் எழுந்தருளினார். மதியம் திருத்தேர்
வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 3ல் தெப்பத்திருவிழா, 4ல் தீர்த்தவாரி, கொடியிறக்கம், 6ம் தேதி வசந்த விழாவுடன் நிகழ்ச்சி நிறை வடைகிறது.