திருப்பதி : திருமலை திருப்பதி தரிசனத்திற்கு செல்பவர்கள் தரிசனம் மற்றும் அறை ஒதுக்கீட்டிற்கு அதற்கான கவுண்டர்களுக்கு சென்று ஆதார் அட்டை காண்பித்து தரிசனம் மற்றும் அறைக்கள் ஒதுக்கீட்டிற்கான ரசீதை பெற்றுக்கொள்வர். இந்த முறையில் அதிகப்படியாக டோக்கன் செல்வதை தடுக்கவும் பேப்பர் உபயோகத்தை குறைக்கவும் வேண்டி முகத்தை ஸ்கேன் செய்து கொண்டு தகவலை போன் மூலம் எஸ்எம்எஸ் செய்து விடுகின்றனர். போனில் வந்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட வாசலுக்கு சென்றால் மீண்டும் ஸ்கேனர் செய்யும் முகமே அடையாளமாகி சம்பந்தப்பட்ட பக்தர்களுக்கு தரிசனத்திற்கு செல்ல வழிவிடும். இதே போல அறைகள் ஒதுக்கீடும் நடைபெறும். இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில் இன்று காலை முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடைமுறைப்படுத்தியுள்ளது.