பதிவு செய்த நாள்
01
மார்
2023
03:03
கோவை : கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
கோவை , கோனியம்மன் கோவில் திருத்தேர் திருவிழா, கடந்த பிப்., 21ல் கொடியேற்றம் மற்றும் அக்னிச்சாட்டுடன் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து புலி, கிளி வாக னங்களில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு கோனியம்மன் அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் அம்மன் தேரின் உள்ளே அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மக்களின் வெள்ளத்தில் தேர் கோவை நகர வீதிகளில் வலம் வந்தது. தேரோட்டத்தை காண கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை, மேட்டுப்பாளையம் , ஊட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு காலை ராஜவீதி தேர்த் திடலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற கோரி உப்பு, மற்றும் மிளகு ஆகியவற்றை தேர் மீது தூவி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். தேரானது ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, பெரியகடைவீதி ஆகியரோடுகளில் வலம் வந்தது. இதில் திரளாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என கலந்துகொண்டு கோவையின் காவல் தெய்வமான கோனியம்மனை வழிபட்டனர். வரும் 3ல் தெப்பத்திருவிழா, 4ல் தீர்த்தவாரி, கொடியிறக்கம், 6ம் தேதி வசந்த விழாவுடன் நிகழ்ச்சி நிறை வடைகிறது.