பதிவு செய்த நாள்
02
மார்
2023
04:03
பழநி: பழநி முருகன் கோயிலில் உப கோவிலான கிழக்கு ரத வீதி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் நேற்று (மார்ச்.1ல்) அழகுநாச்சியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. பழநி, மாரியம்மன் கோயிலில், மாசி திருவிழா பிப்,.17ல் மூகூர்த்த கால் நடப்பட்டு, பிப்.,22, அதிகாலை மாரியம்மன் கோயில் முன் கம்பம் நடப்பட்டது.பிப்., 28ல் இரவில், கொடியேற்றம் நடந்து, கோயில் முன் வைக்கப்பட்ட கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது. மார்ச்.1ல் அடிவாரம், குமாரசத்திரம் அழகு நாச்சியம்மன் கோயில்களில் திருக்கல்யாணம் நடைபெற்றது. தங்க மயில், சிம்மம், வெள்ளி யானை, தங்க குதிரை வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கும். மார்ச்.,7 ல் மாலை 6:40 மணிக்கு மேல் மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்று, மார்ச்.,8 ல் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது. மார்ச்.,9 கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைய உள்ளது.